உடல் எடை குறைக்க உதவும் உணவுகள்

● உடல் எடை அதிகம் இருக்கும் அனைவரும் நன்கு சாப்பிடுவார்கள் என்பது காரணம் கிடையாது சிறுவயது முதல் கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் நபருக்கு உடல் எடை அதிகரிக்கும் உடலில் கொழுப்பு அதிகரித்து பல தொந்தரவை உண்டாக்கும் அதனை சரிசெய்ய உடல் பயிற்சி அவசியம் ஆனால் அதற்கு நேரம் இல்லாமல் போய் விட்டது பிறகு என்னதான் செய்வது.

ஆப்பிள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கு தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் இதில் பெட்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி ஆப்பிளில் அதிகம் இருப்பதால் எளிதில் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.

கத்திரிக்காய் கலோரி இல்லாத காய் வகைகளில் ஒன்று கத்திரிக்காய் எவ்வளவு சாப்பிட்டாலும் நம் உடம்பில் கலோரிகள் ஏறுவதில்லை இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி கொள்ளும் ஆற்றலை கொண்டுள்ளது எனவே தினசரி உணவில் கத்திரிக்காயை அதிகம் சேர்த்து வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்து விடலாம்.

பார்லி தானிய வகையை சேர்ந்த பார்லி கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன பார்லியை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது கொழுப்பை குறைப்பது மட்டுமின்றி ஊட்டச்சத்தும் நிறைந்தது.

மீன் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிகம் மீன் சேர்த்துக்கொள்வது நல்லது மீன் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது மீனில் இருக்கும் நல்ல கொழுப்புகள் அதிகம் உட்கொள்ளும் போது கெட்ட கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படுகின்றது குறிப்பாக சால்மன் போன்ற மீன் வகைகள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை வெகுவாக கட்டுப்படுத்துகின்றது.

வெங்காயம் பொதுவாகவே நம் அன்றாட உணவில் வெங்காயம் சேர்ப்பது வழக்கம் வெங்காயத்தில் இருக்கும் கேவநைட் ரத்த குழாயில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து அகற்றும் ஆற்றல் கொண்டுள்ளது இதனால் உணவில் அதிகம் வெங்காயம் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலம் பெறும்.

தேயிலை தேயிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது இதனால் தான் க்ரீன் டீ பிளாக் டீ போன்ற டீ வகைகள் வெகுவிரைவாக கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து விடுகின்றன எனவே பால் சேர்க்காமல் தேநீரை தினமும் அருந்தி வரும் போது விரைவாக கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

நட்ஸ் வகைகள் பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் இருக்கிறது இது விரைவாக நமது உடம்பில் தங்கி உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் சாதாரண பழங்களைவிட சிட்ரஸ் நிறைந்துள்ள ஆரஞ்சு எலுமிச்சை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வரும் போது அதில் இருக்கும் கேப்டீன் மூலப்பொருள் ரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து இதயத்தை பாதுகாக்கிறது எனவே சிட்ரஸ் பழங்களை நாம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முழு தானியம் முழு தானியங்களில் தினை கேழ்வரகு போன்ற தானியங்கள் உடலுக்கு அதிக நன்மைகளை செய்யக் கூடியவையாக இருக்கின்றன எண்ணற்ற நார்ச்சத்துக்கள் இதில் இருப்பதால் நமது உடம்பில் தேங்கி உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை விரைவாக அகற்றி உடலுக்கு வலு சேர்க்கின்றது.

பசலைக் கீரை பசலைக் கீரையில் லூடின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நமது உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் எனவே குறைந்தது வாரம் ஒரு முறையாவது பசலைக்கீரையை உணவில் சேர்த்து வரும் பொழுது நல்ல பயன் கிடைக்கும்.

சோயா சோயாவில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது எனவே அடிக்கடி உணவில் சோயா சேர் த்து வரும் பொழுது உடல் எடையை குறைத்து இதயத்திற்கு வலு சேர்க்கும்.

● அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு மேலே குறிப்பிட்டிருக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குவதோடு ஆரோக்கியமான உடல்நலத்தை நாம் பெற முடியும்.

● ஆப்பிள்    ● பாதம் பருப்பு 

Comments