ஆப்பிள்
• ஆப்பிளில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், யூரிக் அமிலங்கள், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, இவை அனைத்தும் அடங்கியுள்ளது.
• தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.
• ஆப்பிள் சாப்பிடுவதால் இரத்த சோகை நீங்கும் மற்றும் இரத்த ஓட்டம் சீராகும்.
• தேவையற்ற கொழுப்புகள் குறைந்து HDL என்னும் நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.
• சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறையும்.
• அதிக இரத்த போக்கையும் ஆப்பிள் தடுக்கும்.
• நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.
• செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது.
• கால்சியத்தை உடலில் சேமிக்கச் செய்கிறது.
• உடலில் இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
• சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.
• இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவு ஆப்பிள்.
• நரம்புத் தளர்ச்சி நீங்கவும் நன்றாக தூக்கம் வருவதற்கும் ஆப்பிள் பயன்படுகிறது.
• ஆப்பிள் சிறுவர்களின் உடல் வளர்ச்சிக்கும் எலும்பு வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் உதவுகிறது.
• ஆப்பிள் பழச்சாறு. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும், வாய் துர்நாற்றத்தை போக்கும், ரத்த அணுக்களை அதிகரித்து ரத்த சோகையை மாற்றும் குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது.
• குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு இருப்பின் ஆப்பிள் பழத்தை ஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும் இவை பெரியவர்களுக்கும் கூட பொருந்தும்.
• உடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும் வியர்வை நாற்றம் அடிக்கும் இப்படி உள்ளவர்களின் இரத்தம் சுத்தியடையும் கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும் தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் நல்லது.
• ஆப்பிள் புற்றுநோய் வராமல் தடுக்கும் குறிப்பாக குடற்புற்று ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது.
• ஆப்பிள் சாப்பிடுவதால் உடம்பில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகிறது இதனால் தோல் பளபளப்பாக இருப்பது மட்டுமின்றி இளமையை நீடிக்கவும் இவை உதவும்.
• ஆப்பிளை நறுக்கி தேன் கலந்து சாப்பிட அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வாய்வு போன்றவை நீங்கும்.
• கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.
• ஆனால் அதிலுள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் எனவே கர்ப்பிணி பெண்கள் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.
இத்தனை நற்குணங்கள் உள்ள ஆப்பிளை நாம் தினமும் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment