பாதம் பருப்பு

• பாதாமின் தோல் பகுதியில் அதிகப்படியான டியனின் இருக்கும் இது பாதம் பருப்புக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக இருக்கும் அதனால் எளிதில் பாதாமில் உள்ள சத்துக்களை வெளியே விடாது அதனால் தான் பாதாம் தோலை நீக்கியபின் சாப்பிட வேண்டும்.

• தினமும் இரவு தூங்கும் முன் ஐந்து பாதாம் பருப்பை ஒரு கிண்ணத்தில் வைத்து அவை முழுகும் வரை தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும் பின்பு காலை எழுந்து ஊறவைத்த பாதாம் பருப்பை தோல் நீக்கிய பின் சாப்பிட வேண்டும்.

• வைட்டமின் E, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், செம்பு, மில்லினியம், போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

• நாளொன்றுக்கு நமது உடம்பிற்கு 15mg வைட்டமின் E சத்து தேவைப்படுகிறது அவை பாதம் பருப்பின் மூலம் நமக்கு கிடைக்கும்.

• நீரில் ஊற வைத்த பாதாம் மேலிருந்து லிப்பிஸ் என்னும் நொதி வெளியிடப்படுகிறது நாம் இதை சாப்பிடும்போது நாம் உண்ட மற்ற உணவுகள் எளிதில் செரிக்க உதவுகிறது.

• உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை கூட்டுகின்றது இதனால் உடம்பில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் உடல் எடை குறைக்கவும் கொழுப்பு சத்து குறைவால் உடல் எடை குறைவாக உள்ளவர்கள் உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது.

• கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுகின்றது பாதாம் பருப்பில் உடலுக்கு தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் கிடையாது அதனால் பாதாம் பருப்பு அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

• உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளையும் மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளையும் அதிகம் உண்பதால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகின்றது பாதாம் பருப்பில் உணவை செரிக்கும் வேதிப்பொருள்கள் அதிகம் இருப்பதால் அதனை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை பிரச்சினையும் தீரும்.

• ஊறவைத்த பாதாமில் அதிக அளவில் புரதம் மற்றும் வைட்டமின் சத்து நிறைந்து இருக்கின்றன இதனை அதிக அளவு உண்பவர்களுக்கு உடலில் எலும்புகள், நரம்புகள், தசைகள், ஆகியவை வலுப்பெற்று உடலுக்கு அதிக அளவு ஆற்றலை கொடுக்கிறது.

• மெலனின் கிரட்டின் புரதங்கள் அதிகம் உள்ளது பாதாம் பருப்புகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி குறைபாடு திருகின்றது மிக இளம் வயதிலேயே தலைமுடி நரைத்தல் போன்ற பிரச்சனை நீங்குகின்றது.

• பாதாம் பருப்பை அதிகம் சாப்பிட்டு வருவதனால் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து சுரம், வைரஸ் போன்ற தொற்றுகளில் இருந்து நம்மை காக்கின்றது.

• பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் தோல் பளபளப்பாக காணப்படும்.

• ஆண்மை குறைவுக்கு சிறந்த தீர்வு பாதாம் பருப்பு. பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்பு வலுவடையும், மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.

• உடலில் ஓடும் ரத்தம் சீரான நிலையில் இருக்க ரத்தத்தில் சரியான அளவில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டும் ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை பெருக்கும் சக்தி பாதாம் பருப்புக்கு அதிகம் இருக்கிறது.

• கர்ப்பிணிப்பெண்கள் பாதாம்பருப்பை அளவாக சாப்பிட்டு தன்னையும் தன் குழந்தையையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

     இத்தனை நற்குணங்கள் உள்ள பாதம் பருப்பை நாம் தினமும் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Comments

  1. பயனுள்ள தகவலுக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment