பப்பாளி பழம்
• கண்களை பாதுகாக்க கூடிய உணவுகளில் முதலிடம் பப்பாளிக்கு தான் கொடுக்க வேண்டும் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் சிறுவயது முதல் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் கண் பார்வை குறைபாட்டை தவிர்க்க முடியும் மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் விரைவில் கண் பார்வைத் திறன் அதிகரிக்கும் மற்றும் முதிர்வு காலத்தில் வரக்கூடிய கண்பார்வை பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும்.
• பெண்களுக்கு மிக சிறந்த பழங்களில் ஒன்றாக பப்பாளி விளங்குகிறது குறிப்பாக மாதவிடாய் பிரச்சனை சரி செய்யக்கூடியது ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஆரம்பமாகிய வயது முதல் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் எதிர்காலத்தில் குழந்தை பிறப்பில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் கருப்பை வலுவாக இருக்கும் மற்றும் மாதவிடாய் வருவதற்கு 15 நாள் முதலிலிருந்தே பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் தவிர்க்கப்பட்டு சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வர வேண்டும் என்ற சுழற்சி தொடரும் பப்பாளி சூட்டை தரக்கூடியது தானே தவிர கருச்சிதைவை உண்டாக்காது கருத்தரித்த தாய்மார்கள் முதல் மூன்று மாதம் பப்பாளி எடுப்பதை தவிர்ப்பது நல்லது எனவே பெண்கள் கட்டாயம் பப்பாளி பழத்தை சேர்த்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது.
• சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய இனிப்பு சுவை நிறைந்த ஒரே பழம் பப்பாளி எந்த பழமும் எடுத்துக்கொள்ளாத சர்க்கரை நோயாளிகளுக்கு எப்போதும் சோர்வு இருந்து கொண்டே இருக்கும் அதிக அளவு கட்டுப்பாடுகள் மாத்திரைகள், இன்சுலின் அனைத்தும் எடுத்துக்கொண்டு சத்தான உணவு எடுத்துக் கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் பல சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டு அந்த ஏக்கத்தை போக்க கூடியது பப்பாளி குறைந்த அளவில் பப்பாளி பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் நல்ல ஒரு ஆற்றல்(Energy) கிடைக்கும் சர்க்கரையினால் வரக்கூடிய சோர்வு இருக்காது நரம்பு தளர்ச்சி ஏற்படாது.
• பப்பாளி பழத்தை சாப்பிட்டால் வயிற்றுவலி ஏற்படும் என்ற வாக்கியம் சரியானது கிடையாது பப்பாளி பழத்தை நன்கு தோல் நீக்கி உள்ளிருக்கும் சிவப்பு நிற பழத்தை அளவாக சாப்பிட்டு வர உடலில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும் பப்பாளியின் சுவை மற்ற பழங்களை விட சற்று மாறுபட்டு இருப்பதால் சிறு வயது முதல் சாப்பிட பழகுவது நல்லது.
• விலை குறைவு எளிதில் கிடைக்கும் என்று பப்பாளியை அலட்சியப்படுத்தாமல் தினமும் அளவாக எடுத்துக்கொண்டு பப்பாளியில் இருக்கக்கூடிய அனைத்து சத்துகளையும் பெற்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment