மாதுளம் பழம்
100 கிராம் மாதுளையில் கலோரி-83%, வைட்டமின் சி-17%, வைட்டமின் கே-14%, கார்போஹைட்ரேட்-14%, புரதச் சத்து-14%, பொட்டாசியம்-6%, இரும்புச்சத்து-4%, மெக்னீசியம்-3%, கொழுப்பு-1%, நார்ச்சத்து-16% நிறைந்துள்ளது.
இதயத்திற்கு நல்லது அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டுவர மாதுளை நம் உடலில் இருக்கக்கூடிய நைட்ரிக் ஆசிட் என்னும் தனிமத்தை அதிகரித்து ரத்த அழுத்தத்தை சீராக்கும் இதன் மூலமாக இருதயமும் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சினையும் வராமல் தடுக்கக்கூடியது மாதுளை.
சர்க்கரை நோயை தடுக்கும் டைப் 2 சர்க்கரையை எதிர்க்கும் பண்புகள் மாதுளைக்கு உண்டு மாதுளையில் நாட்டு மாதுளையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டுவர இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை குறைக்கும் மற்றுமின்றி பரம்பரையாக வரக்கூடிய சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு.
ரத்தசோகை குணமாகும் மாதுளையில் ரத்தம் உற்பத்திக்கு தேவையான ஹலோலைட் இரும்புச் சத்து வளமான அளவில் நிறைந்திருக்கிறது மாதுளையை தினமும் சாப்பிட்டுவர உடலில் ரத்தம் அளவு அதிகரிப்பதன் மூலம் ரத்த சோகை விரைவில் குணம் ஆகும்.
பற்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது மாதுளையில் உள்ள சில தனித்துவமான பண்புகளில் பிளேக் உருவாகுவதை தடுக்கிறது இதன் மூலமாக பற்கள் ஆரோக்கியமாகவும் வலிமையுடனும் இருக்கும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் மாதுளை சாப்பிட வேண்டும்.
சர்ம ஆரோக்கியத்திற்கு நல்லது மாதுளை சர்ம ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மாதுளையில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கின்றது இது சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது மாதுளையை தினமும் சாப்பிட்டுவர இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டிஏஜ் பண்புகள் முதுமையை தாமதப்படுத்தும் மற்றும் உடலில் புதிய செல் உற்பத்திக்கு இருக்கிறது, சரும சுருக்கம், சரும புற்றுநோய் வராமலும் தடுக்க கூடியது மாதுளை.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மாதுளையில் இருக்கக்கூடிய அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் இதன் மூலமாக உடலில் பிற நோய் வராமல் பாதுகாக்கிறது மாதுளை.
செரிமான மண்டலம் சீராக ஆகும் மாதுளையில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது இதனை சாப்பிட்டு வர செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு செரிமான சம்பந்தமான பிரச்சனை வருவதும் தடுக்கப்படும்.
புற்றுநோய் தடுக்கப்படும் புற்றுநோய் கட்டிகள், பாக்சைட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற அனைத்து வகை புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு முக்கியமாக மாதுளையை தினமும் சாப்பிட்டுவர புற்றுநோய் செல்களின் உற்பத்தியை மட்டுப்படுத்துகிறது என பல்வேறு ஆய்வுகளில் தெரிவித்துள்ளன தினமும் மாதுளை சாப்பிட்டுவர புற்றுநோய் வராமல் தடுக்கப்படும்.
பெண்களுக்கு நல்லது திருமணமான பெண்கள் கரு உற்பத்தியில் பிரச்சினை இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளை சாப்பிட்டு வர ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கருப்பை ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைந்து மூட்டுவலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு பெண்கள் மாதுளையை சாப்பிட்டுவர ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும் மாதுளையை தினமும் சாப்பிட்டுவர மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்தியை அதிகரித்து மூளை சுறுசுறுப்பாகவும் இதன் மூலமாக ஞாபக சக்தியும் அதிகரிக்கும் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
இத்தனை அற்புதத்தை ஒன்று சேர்த்து நமக்கு தரக்கூடிய மாதுளையை நாம் தினமும் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
,❤️
ReplyDelete