உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

     இன்று சிறு குழந்தைகள், இளம் வயதில் இருப்பவர்கள் சரியான உடல் எடை இல்லாமல் இருப்பவர்கள் அதிகம் உள்ளன ஒல்லியாக இருப்பதுதான் அழகு என யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். முக்கியமாக பெண் குழந்தைகள் ஒல்லியாக இருப்பதும் மிக மெலிந்து இருப்பதும் அழகின் குறியீடாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் சரியான உடல் எடை இல்லை என்றால் அது ஆரோக்கியத்திற்கு ஒரு சவாலாக மாறிவிடும்.

உடல் எடை அதிகரிக்க :

● உணவில் அக்கறை காட்டவேண்டும் குழந்தை பருவத்தில் இருந்தே உணவில் அக்கறை காட்டவில்லை என்றால் ஒரு வயதிற்கு பிறகு எவ்வளவு தான் சாப்பிட்டாலும் எந்த நல்ல உணவுகள் எடுத்துக் கொண்டாலும் விலை உயர்ந்த சத்தான உணவுகள் எடுத்துக் கொண்டாலும் கூட எடை கூடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

● அசைவ உணவுகளில் புதிதாக கிடைக்கக் கூடிய கடல் மீன், நாட்டுக்கோழி, முட்டை இவை அனைத்தும் உடல் எடையை இயல்பாகவே கூட்டக் கூடியவை.

●உடல் எடை அதிகரிக்க வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த புரதங்கள் போன்ற உணவுகள் பக்கம் போகாமல் நாம் பயன் படுத்தும் சத்துமாவு கஞ்சி, பழங்கள் எடுத்துக் கொண்டாலே உடல் எடை தேவையான அளவுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் உடல் நல கேடும் கொடுக்காமல் படிப்படியாக உடல் எடை அதிகரிக்கும் அத்துடன் உடல் பயிற்சி வேண்டும்.

●பித்த உடம்பு உள்ளவர்கள் என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாகவே தான் இருப்பார்கள் பித்தத்தை குறைப்பதற்கு ஆண்கள் எண்ணெய் பலகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மற்றும் பெண்களுக்கு பித்தம் அதிகம் இருந்து வெள்ளை படுதல் இருந்து அதனால் மெலிந்து போகின்றார்கள் என்றால் வெள்ளை பூசணிக்காயில் செய்த உணவு சேர்த்துக்கொள்ளவேண்டும், சோற்றுக்கற்றாழை, சாறு, லேகியம் சேர்த்துக்கொண்டால் உடல் சூடு குறைந்து இயல்பான உடல் எடை கூடுவதற்கு உதவியாக இருக்கும்.

குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள் :

● சில  குழந்தைகளுக்கு பசி என்பது இருக்காது அவ்வித குழந்தைகளுக்கு பசியை தூண்டும் வகையில் உணவு அமைய வேண்டும் அவ்வகையில் பஞ்சதீபாகனி என அழைக்கக்கூடிய சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த ஐந்தையும் மேல்தோலை சீவிய பின் நன்கு வறுத்து பொடி செய்து அந்த பொடிக்கு சமமாக நாட்டு வெல்லம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒல்லியாக சாப்பிட மறுக்கக்கூடிய குழந்தைகளுக்கு ஒரு கால் ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து உணவுக்கு முன்பு குழந்தைக்கு கொடுத்து விட்டோம் என்றால் அது நல்ல பசியைத் தூண்டும் பசியுடன் குழந்தை வரும்போது புரதம் சேர்த்த உணவை கொடுக்க வேண்டும் புரதம் உணவுகள் என்றால் பாசிப்பயிறு, வெள்ளை கொண்டைக்கடலை, சிவப்பு கொண்டகடலை, ரஜ்மா கடலை, பொட்டுக்கடலை இது போன்ற பயிர்களை நன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும் வெண்பொங்கலும், இட்லியும் கூட மிக சிறப்பான அளவில் உடல் எடையை கூட்டுவதற்கு உதவி செய்ய மிக எளிய உணவுகள் அதனை எடுத்துக்கொள்ளலாம்.

● சிகப்பு அரிசி அவுல், முளைக்கட்டிய பாசிப்பயறு, தேங்காய் திருவள் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும் குழந்தைகள் மிகக் குறைவான எடையுடன் இருந்தால் நேந்திரம் பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி தேன் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து தினமும் மாலைப்பொழுது சிறிதளவு எடுத்து வந்தால் உடல் எடை கூடும். கைக்குழந்தை தாய் பாலுக்கு பிறகு மிகவும் மெலிந்து இருந்தால் அந்த குழந்தைக்கு நேந்திரம் பழம் மாவு கஞ்சி கொடுக்க வேண்டும் அது கை குழந்தைக்கு உடல் எடை கூடுவதற்கு சரியான உணவு ( நேந்திரம் பழம் மாவு வீட்டிலேயே செய்யலாம் நேந்திரம் பழம் தோல் நீக்கி துண்டு துண்டாக நறுக்கி அதன் ஈரப்பதம் குறையும் வரை வெயிலில் காய வைத்து அரைத்து பொடி செய்து) ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கவைத்து பசும்பால் சேர்த்து கொடுத்தால் கைக்குழந்தை உடல் எடை அதிகரிக்க மிகவும் உதவும் குழந்தைகளுக்கு 8, 9 ஆவது மாதம் கொடுக்க வேண்டிய உணவில் இதனை சேர்த்து கொண்டால் மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.

     அழகு என்பது உடல் எடை குறைவில் அல்ல ஆரோக்கியத்தில் தான் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் உடல் எடையை அதிகரிக்க மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டு  உடல் எடையை அதிகரிப்பதோடு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தொடங்குங்கள்.


Comments