உலர்ந்த திராட்சை
உலர் திராட்சையில் வைட்டமின் பி, வைட்டமின் சி, ஃபோலிக், ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டின்கள், லுடின், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
அனிமியா(Anemia) என அழைக்கக் கூடிய இரத்த சோகை குணமாகும் ரத்த சோகையினால் அவதிப்படுபவர், அதிக சோர்வு எந்த வேலையும் செய்ய மனமின்மை இதுபோல பிரச்சனையினால் அவதிப்படுபவர் ஒரு கையளவு கருப்பு உலர் திராட்சையை இரவு நீரில் ஊற வைத்து பின்பு மறுநாள் காலை அந்த நீரையும் திராட்சையையும் சாப்பிட வேண்டும் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர மிக விரைவில் ரத்த அளவில் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கெட்ட கொழுப்புகளை குறைக்கும் கெட்ட கொழுப்பால் அவதிப்படுபவர் மூன்று வேளையும் உணவுக்குப் பிறகு காய்ந்த திராட்சையை சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் இதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவு சீராகும்.
உடல் சூட்டை தணிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரில் 20 முதல் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து பின் அந்த நீரையும் திராட்சையையும் அந்த நாள் முழுவதும் அவ்வப்போது குடித்து வர உடல் சூடு குறையும் மற்றும் உடல் சூட்டால் ஏற்படக்கூடிய பிரச்சனை வராமல் தடுக்கும்.
மாதவிடாய் பிரச்சனை குணமாகும் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிபடும் பெண்கள் தினமும் ஒரு கையளவு உலர் திராட்சையை வெதுவெதுப்பான நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து பின் அந்த திராட்சையை சாப்பிட்டு வர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக ரத்தப் போக்கு வயிற்றுவலி மற்றும் அதிக சோர்வு போன்ற பிரச்சனையும் வராமல் தடுக்கும்.
சிறுநீரக பாதையில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை குணப்படுத்தும் Urinary Tract Infection என அழைக்கக்கூடிய தொற்று ஒருமுறை ஏற்பட்டாலே மீண்டும் மீண்டும் வந்து அவதி படுத்த கூடியது இந்த சிறுநீர் தொற்று இதுபோன்ற பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கை அளவு திராட்சையை நீரில் ஊறவைத்து பின் மறுநாள் காலை அந்த நீரையும் திராட்சையும் சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீர் தொற்று குணமாகும் மற்றும் மீண்டும் வராமல் தடுக்கும் ஆயுர்வேத முறையில் சிறுநீர் தொற்றுக்கு பரிந்துரைக்க படுவது இந்த உலர் திராட்சை தான்.
மலச்சிக்கல் குணமாகும் அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் 20 முதல் 25 உலர் திராட்சையை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பின் அந்த நீருடன் திராட்சையையும் மசித்து காலை மாலை என இருவேளையும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும் குறிப்பாக கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலுக்கு கர்ப்பிணி பெண்கள் தாராளமாக இந்த முறையை பின்பற்றலாம் கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலை வெகு விரைவில் குணப்படுத்தும்.
எலும்புகளை வலுவாக்கும் எலும்பு சம்பந்தமான பிரச்சனையை வராமல் தடுக்கவும் எலும்புகளை வலுவாக்கவும் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது ஏனென்றால் உலர் திராட்சையில் உள்ள அதிக அளவிலான கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்புகள் வலிமையாகும் இதன் மூலமாக மூட்டு தேய்மானம் மூட்டு வலி போன்ற பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.
ரத்த அழுத்தம் சீராகும் உலர் திராட்சையில் பொட்டாசியம் சத்து நல்ல அளவில் இருக்கிறது இது நரம்புகள் எளிதில் சுருங்கி விரிய உதவி செய்யும் இதன் மூலமாக ரத்த அழுத்தம் சீராகும் ரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள் உலர்திராட்சையை சாப்பிட்டு வர விரைவில் பலன் தரும்.
நெஞ்சு எரிச்சல் குணமாகும் வயிற்றில் உள்ள அதிக அமிலத்தன்மை காரணமாக வயிறு எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் திராட்சையை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான பொட்டாசியம், மெக்னீசியம் வயிற்றிலுள்ள அமிலத்தை சமநிலைப்படுத்தி வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கும்.
ஆண்மை குறைபாட்டை குணமாக்கும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய விரைப்புத்தன்மை குறைபாடு மற்றும் நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சனையால் அவதிப்படும் ஆண்கள் ஒரு டம்ளர் பாலில் ஒரு கை அளவு உலர் திராட்சை சேர்த்து காய்த்து ஆறிய பிறகு உலர்திராட்சை யுடன் கூடிய பாலை காலை மாலை இருவேளையும் குடித்து வர உடல் புஷ்தீபாகவும் உடலில் தாது சத்து தேவை பூர்த்தி செய்யப்படும் ஹார்மோன் உற்பத்தி சீராகும் இதன் மூலமாக ஆண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாலின பிரச்சனையும் வெகு எளிதில் குணமாகும்.
எப்போதும் காய்ந்த திராட்சையை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து நன்கு கழுவிய பின்பு பயன்படுத்துவது மிகவும் நல்லது.
Comments
Post a Comment