முந்திரி பருப்பு

 

● 12 முதல் 14 முந்திரி எடுத்துக்கொண்டால் அதில் 5 கிராம் புரோட்டின், அன்சாச்சுரேட்டட் என அழைக்கக் கூடிய 12 கிராம் ஒமேகா 3 ஒமேகா 6 என்ற நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது, 1 கிராம் ஃபைபர், 65% காப்பர் (காப்பரின்  வேலை உடலில் ஆற்றல்(Energy) உற்பத்தி செய்வது மூளை ஆரோக்கியமாக செயல்பட வைப்பது மற்றும் காப்பர் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ) 20 % மெக்னீசியம் இது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும், 15% சிங்க், பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் பி தொகுதிகள், குரோமியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

● தினமும் 4 முதல் 5 முந்திரியை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாகும் மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனை வருவதும் தடுக்கப்படும்.

● முந்திரியில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு நல்ல சீரான மனநிலை பெறுவதற்கு உதவுகிறது.

● மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான பாலி அன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் முந்திரியில் நிறைந்து உள்ளது இது மூளையில் புதிய செல்கள் உற்பத்தி ஆகுவதற்கு மூளையில் ஆக்சிடென்டாம் சீராக இருப்பதற்கும் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தேவையான ரசாயனத்தை சுரக்கவும் உதவி செய்கிறது இதன் மூலமாக மூளை நன்கு ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.

● முந்திரியில் இருக்கும் காப்பர் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான நொதிகளை சுரக்க உதவி செய்கிறது குறிப்பாக பெருங்குடல் அலர்ஜி, பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க கூடியது.

● முந்திரியை தினமும் சாப்பிடுவதன் மூலம் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து HDL எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

● முந்திரிப் பருப்பில் உள்ள அயன், மெக்னீசியம், ஜிங்க், காப்பர் சத்துக்கள் நல்ல வலிமையான தசைகளை பெற உதவி செய்கிறது.

● தலைமுடியின் நிறத்திற்கு அடிப்படையாக இருக்கக் கூடிய மெலானின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை பெருக்குகிறது இதன் மூலமாக தலை முடி நல்ல கருமையாக இருக்கும் மற்றும் முந்திரிப் பருப்பில் இருக்கக்கூடிய காப்பர், இரும்பு சத்துக்கள் தலைமுடி நன்கு வளர்வதற்கு உதவுகிறது.

● முந்திரிப்பருப்பை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

● சில நபருக்கு முந்திரியை சாதாரணமாக சாப்பிடும் பொழுது உடல் ஏற்றுக் கொள்ளாமல் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது அவ்வாறு இருக்கும் நபர்கள் முந்திரியை வறுத்து சாப்பிடுவது நல்லது.

முந்திரியை அளவாக தினமும் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

Comments