கறிவேப்பில்லை


1, கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, நீர்ச்சத்து,  புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

2, தினமும் காலையில் 15 கறிவேப்பிலையை  சுத்தமாக கழுவிய பின் சாப்பிட வேண்டும்.

3, அனிமியா என அழைக்கக் கூடிய ரத்த சோகை உள்ளவர்கள் ரத்த சிவப்பு அணுக்களின் அளவை அதிகரிக்க காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், கறிவேப்பிலையையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பு அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

4, செரிமான பிரச்சனை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை தீரும்.

5, கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இவை அனைத்தும் கல்லீரலை பலமாகவும் எவ்வித நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது.

6, பித்த சூடு, கர்பப்பை சூடு இதனை குறைக்க கறிவேப்பிலையுடன் சீரகம், வெந்தயம் இவை அனைத்தையும் நன்கு அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

7, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன் தேன் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள  சளி பிரச்சனை தீரும்.

8, பச்சை கறிவேப்பிலையை மென்று அதன் சாறை முழுங்கினால் போதும் வாய்ப்புண் சரியாகிவிடும்.

9, உடல் எடையை குறைப்பதற்காகவும் வயிற்றை சுற்றி உள்ள அதிக கொழுப்புகளை குறைக்க உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சியுடன் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பு மிக விரைவில் குறையும்.

10, டைபேட்ஸ் என அழைக்கக்கூடிய சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

11, கறிவேப்பிலையில் பாஸ்பரஸ் சத்து இருக்கிறது மற்றும் இதில் கெட்ட கொழுப்பு கிடையாது இதை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது கெட்ட கொழுப்பு அனைத்தையும் கரைத்து வெளியேற்றிவிடும் அதனால் நம் இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

12, சில நபர்களுக்கு சாப்பிட்ட பின் அல்லது வெளியே செல்லும் முன் மலம் கழித்துவிட்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் வரும் நோயின் பெயர் தான்  Irritable Bowel Syndrome (இரிடேபிள் பௌல் சிண்டிறோமே) இவ்வித நோயால் அவஸ்தைப்படும் நபர்கள் கறிவேப்பிலை, மாதுளை ஓடு, மாம்பருப்பு, சுண்டவத்தல் இவை அனைத்தையும் பொடி செய்து கால் ஸ்பூன் அளவில் எடுத்து மோரில் கலந்து குடித்து வர வேண்டும் இவ்வாறு செய்வதால் சாப்பிட்ட பின்பு மலம் கழிக்கவேண்டும் என்ற பிரச்சனை சரியாகிவிடும்.

13, வாய்வுக் கோளாறு இருப்பவர்கள் கறிவேப்பிலை, பொடியுடன், பெருங்காயத் தூள் சேர்த்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சாப்பாடு சாப்பிட்ட பின் சாப்பிட வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் வாய்வு பிரச்சனை சரியாகிவிடும்.

14, பித்தவெடிப்பு இருப்பவர்கள் கறிவேப்பிலையை மிளகாய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

15, சர்ம பிரச்சினை எதுவாக இருந்தாலும் கறிவேப்பிலையுடன்  மஞ்சள் சேர்த்து அரைத்து பிரச்சனை இருக்கும் இடத்தில் தடவினால் போதும் சர்ம பிரச்சனை நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.

16, முகப்பரு இருப்பவர்கள் கறிவேப்பிலையுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணிநேரம் பின் குளித்தால் போதும் முகப்பரு குறைய தொடங்கும்.

17, கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

18, பித்த சூடு, கர்பப்பை சூடு இதனை குறைக்க கறிவேப்பிலையுடன் சீரகம், வெந்தயம் இவை அனைத்தையும் நன்கு அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

19, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன் தேன் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள  சளி பிரச்சனை தீரும்.

20, கண் பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், கண் உறுத்தல் இருப்பவர்கள் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும் ஏனென்றால் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.

     இத்தகைய சிறப்புடைய கறிவேப்பிலையை நாம் உணவில் இருந்து ஒதுக்கி வைக்காமல் சேர்த்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்போம்.

Comments

  1. நல்லதொரு தகவலுக்கு நன்றி... வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment