எது உண்மையான சர்க்கரை


     உண்மையான சர்க்கரை என்பது கருப்பட்டி, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை இவை அனைத்தும் தான் உண்மையான சர்க்கரை.

கருப்பட்டி உருவாகும் விதம் :

     தென்னை மற்றும் பனை மரம் பாலைகலை   பக்குவப்படுத்தி அதிலிருந்து வரக்கூடிய பதநீரை சிறிய பானைகளை கொண்டு சேகரித்து அதை நன்றாக காய்ச்சி எடுப்பதுதான் கருப்பட்டி.

வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை உருவாகும் விதம் :

• கரும்பிலிருந்து சாறு பிழிந்து அதை பெரிய கொப்பரையில் ஊற்றி நன்றாக காய்ச்சி அவை பாகுவாக வந்த பிறகு கைகளால் உருண்டையாக பிடித்து எடுத்தால் அவை உருண்டை வெல்லம், மரத்தினாலான அச்சுகளில் ஊற்றி உலர்த்தி எடுத்தால் அவை அச்சுவெல்லம், இதில் மீறும் அனைத்து பாகையும் முட்டி என அழைக்கக் கூடிய மரத்தினாலான உருளையை கொண்டு உருட்டி எடுக்கும் சமயத்தில் தான் நாட்டுசக்கரை உருவாகிறது இவை அனைத்தும் தான் சுத்தமான இயற்கையாக கிடைக்கக் கூடிய சர்க்கரை.

• இவ்வாறு இயற்கையாக உருவாக்கக்கூடிய கருப்பட்டி, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை மற்றும் தேன் இவற்றை தான்  இனிப்பு சுவைக்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

• இவ்வாறு உருவாக்கக்கூடிய ஒரு துண்டு வெல்லத்தில் இரும்புச் சத்து, புரதச் சத்து, சாதுசத்து, பாஸ்பரஸ், கால்சியம் கார்னிட்டினே, தைமினே, போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

• சில ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு ஆலைகளில் மீறக்கூடிய சக்கைகளை எடுத்து சென்று அதனுடன் சில வேதிப்பொருட்களை சேர்த்து மிகவும் படிகமான, பளபளப்பான, அழகான ஒரு பொருளை உருவாக்கினார்கள். இந்தப் பொருள் முற்காலத்தில் விடுதிகளிலும், வீடுகளிலும் அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர் ஆனால் பிற்காலத்தில் வெள்ளை சர்க்கரை என்ற பெயருடன் நம் நாட்டு மக்களிடையே வியாபார நோக்கத்தில் வந்தது இப்படி உருவாக்கப்பட்டது தான் வெள்ளை சர்க்கரை.


வெள்ளை சர்க்கரை உருவாகும் விதம் :


• கரும்பிலிருந்து சாறு பிழியப்பட்ட நிலையில் அதிலுள்ள fluid bacteria (பிலுய்ட் பாக்டீரியா) வை கட்டுப்படுத்த அதனோடு  ப்ளீஸ் மற்றும் க்ளோரின் சேர்க்கப்படுகிறது இவை மட்டுமின்றி இந்த கலவை 60 டிகிரி செல்சியஸ் அதில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்காக ஒரு லிட்டர் கரும்புச்சாறு க்கு 200ml Phosphoric Acid (போபோரிக் ஆசிட்) சேர்க்கப்படுகிறது இதற்குப் பிறகு இந்த கரும்புச்சாறு 101 டிகிரி செல்சியஸில் சுண்ணாம்பு சேர்த்து கொதிக்க வைக்கப்படுகிறது இந்த நிலையில் கரும்புச்சாறு தன்னிடம் இருக்கும் அனைத்து சத்துக்களையும்  இழந்து வெறும் இரும்புச் சத்து மட்டுமே இருக்கும். இதற்குப் பிறகு இதில் பாலிஎலக்ட்ரோலைட் என்ற வேதிப்பொருள் சேர்த்து இந்த சுண்ணாம்பு தெளிய வைக்கப்பட்டு நேர்ந்த நிலையிலிருக்கும் இவ்வாறு பெறப்பட்ட கரும்புச் சாற்றை பொன்சார் என அழைக்கப்படுகின்ற எலும்பு கறி மூலமாக வடிகட்டப்படுகிறது இந்த எலும்புக் கறி மாடுகளில் பெறப்பட்ட எலும்பை நன்றாக மக்க வைத்து பல டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு உட்படுத்தி பெறப்படுகிறது சில கரும்பு ஆலைகளில் பல்லாயிரக்கணக்கான எலும்பு கறி தேவைப்படுவதால் சுடுகாட்டில் இருந்து பெறப்பட்ட மனித எலும்புகளையும் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள்.

• இத்துடன் காஸ்டிக் சோடா வாஷிங் சோடா வை கொட்டி மிகவும் வெண்மையாக்க பயன்படுகிறது.

• இறுதியாக இதில் சல்பர் டை ஆக்சைடு மற்றும் சோடியம் ஹைட்ரஜன் சுல்பாரிடே போன்ற வேதிப்பொருள் சேர்த்து இந்த கரைச்சல் மிகவும் படிகைய நிலையில்  நமக்கு வெள்ளை சர்க்கரையாக கிடைக்கிறது.

• இன்று நாம் கடைகளில் வாங்கும் வெள்ளத்தின் விலையைவிட வெள்ளை சர்க்கரையின் விலை சற்று குறைவாக தான் உள்ளது காரணம் 1 கிலோ வெல்லம் தயாரிக்க எவ்வளவு கரும்பு சாறு தேவைப்படுகிறதோ அதே அளவில் கரும்புச் சாற்றுடன் பல வேதிப்பொருள் கலந்து 15 கிலோ சர்க்கரை தயார் செய்யப்படுகிறது இதுதான் விலை குறைவுக்கும் காரணம்.

• விலை குறைவை பார்த்துவிட்டு சர்க்கரை நோயாளியாக மாறி விடாதீர்கள் கடந்த 30 ஆண்டுகளில் 2.5 மில்லியனாக இருந்த சர்க்கரை நோயாளிகள் இன்று 67.5 மில்லியன் அளவிற்கு உயர்ந்து உள்ளார்கள் இதற்கு காரணம் வெள்ளை சர்க்கரை தான்.

• நம் தலைமுறையில் உள்ள சர்க்கரை நோயை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல கூடாது. அதற்கு நாம் வெள்ளை சர்க்கரை இனிப்பைத் ஒதுக்கிவிட்டு இயற்கையாக கிடைக்கும் கருப்பட்டி, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச்சர்க்கரை இதிலிருந்து கிடைக்கும் இனிப்பை பயன்படுத்த வேண்டும்.

     அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தை காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

Comments