பேரிச்சம்பழம்
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் எ1, வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்துள்ளது.
பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கலுடன் பல்வேறு வகையான அமினோ அமிலம் இருக்கிறது. அதனால் பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.
பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும் ஏனென்றால் இயற்கைச் சர்க்கரையான குல்கோஸ், சுக்ரோஸ், குரோட்டஸ் அனைத்தும் நிறைந்துள்ளது.
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ரத்தம் குறைவாக இருக்கும் அந்த சமயத்தில் தினமும் 2 முதல் 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரிப்பது மட்டுமின்றி வயிற்றில் உள்ள குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.
பேரிச்சம்பழத்தில் சோடியம் அளவு குறைவாகவும் பொட்டாசியம் அளவு அதிகமாகவும் இருக்கிறது அதனால் இதை சாப்பிடுவோரின் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இதை ஆண்கள் அதிகம் சாப்பிட்டு வந்தால் ஆண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமான ரத்தப்போக்கு இருக்கும் இதனால் இரும்புச் சத்து கால்சியம்சத்து இவை அனைத்தும் குறைத்துவிடும் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருவதால் முறையற்ற மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.
பேரிச்சம் பழத்திற்கு கொலஸ்ட்ரால் (cholesterol) குறைக்கும் சக்தி உண்டு அதனால் பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும்.
பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து உள்ளது இதனை ரத்தசோகை உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை பிரச்சனையிலிருந்து விரைவில் குணமடைய முடியும்.
இல்லற பிரச்சனையை சரிசெய்ய பேரீச்சம் பழம் உதவும் நரம்புத் தளர்வு உள்ள ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இருக்காது மலட்டுத்தன்மை பிரச்சனையும் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலம் வலுவாகும் இல்லற பிரச்சனை சரியாகிவிடும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவு பேரிச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீருடன் பேரிச்சம் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
உடல் எடை குறைவாக உள்ளவர்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
மது அதிகம் எடுப்பவர் உடலில் நச்சுக்கள் தேங்கி இருக்கும் அந்த நச்சுக்களை வெளியேற்ற பேரிச்சம் பழம் உதவியாக இருக்கும் அதற்கு பேரிச்சம் பழத்தை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு 45 வயதுக்குப் பிறகு இறுதிக்கட்ட மாதவிடாய் வந்து விடும் அந்த சமயத்தில் எலும்புகள் பலவீனமாக இருக்கும் கை, கால் மூட்டுகளில் வலி இருக்கும் அந்த சமயத்தில் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவது மிகவும் நன்மையளிக்கும்.
பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக புற்றுநோய், குடல் புற்றுநோய் இவையெல்லாம் வர வாய்ப்பில்லை நமக்கு செரிமான பிரச்சனையும் இருக்காது.
தினமும் பாலுடன் பேரிச்சம் பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சோம்பேறித்தனம் நீங்கி உடம்பின் ஆற்றல் அதிகரிக்கும்.
இவ்வளவு நன்மைகள் அடங்கிய பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தொடங்குங்கள்.
வாழ்த்துக்கள் 💐 பயனுள்ள தகவலுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDelete