கடலை மிட்டாய்

"கடலை ஏழைகளின் முந்திரி"

• பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு போன்றவைகளில் உள்ள சத்துக்களை விட நிலக்கடலையில் இருக்கும் சத்துக்கள் மிக அதிகம்.

• கடலை மிட்டாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

• கடலை மிட்டாயில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் அடங்கியுள்ளது.

• நிலக்கடலையில் உள்ள வைட்டமின் B உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த ஆற்றல் தரக்கூடியது நம் கடலைமிட்டாய் ஏனென்றால் தசைகளின் வலிமைக்கு மிக முக்கியமான ஒன்று மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

• கடலை மிட்டாயில் உள்ள வைட்டமின் B3 மூளை உடைய செயல்பாட்டை தூண்டுகிறது இதனால் நினைவாற்றல் மிகவும் அதிகமாக இருக்கும்.

• கடலை மிட்டாயை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயநோயால்  வரக்கூடிய பாதிப்பு குறையும்.

• இறைச்சி உணவுகளுக்கு உள்ள சமமான சத்துக்கள் கடலை மிட்டாய்க்கு உண்டு.

• கர்ப்பமான பெண்கள் கடலை மிட்டாய் சாப்பிடுவது நல்லது ஏனென்றால் கர்ப்பப்பை சீராகச் செயல்படவும் கர்ப்பப்பையில் கட்டிகள், நீர்க்கட்டிகள் வராமல் பாதுகாக்கிறது மற்றும் பிறக்க இருக்கும் குழந்தையின் மூளை, நரம்பு, எலும்புகளின் வளர்ச்சி இவை அனைத்தும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

• பெண்கள் கடலை மிட்டாயை சாப்பிடுவதின் மூலம் எலும்பு தொடர்பு உடைய பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்ள முடியும் ஏனென்றால் எலும்புகளை பலப்படுத்தும் சக்தி கடலை மிட்டாய்க்கு உண்டு.

• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் பாதுகாப்பது மட்டுமின்றி இளமை பருவத்தை நீட்டித்து தரக்கூடிய சக்தி நம் கடலை மிட்டாய்க்கு உண்டு.

• கடலை மிட்டாய் கொழுப்பு நிறைந்தது என பலரும் கூறுவார்கள்  ஆம் கடலை மிட்டாயில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது LDL என்னும் கெட்ட கொழுப்பை குறைத்து நல்லது செய்யக்கூடிய HDL என்னும் கொழுப்பை அதிகரிக்கும்.

• நார்ச்சத்து உள்ளதால் மலசிக்கல் வருவதற்கு வாய்ப்பில்லை.

• கடலை மிட்டாயை நாம் சாப்பாடு சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்போ அல்லது பின்போ சாப்பிடுவது நல்லது ஏனென்றால் கடலைமிட்டாய் சாப்பிடுவதின் மூலம் உமிழ்நீர் சுரப்பதால் செரிமான பிரச்சனை வருவதற்கு வாய்ப்பில்லை.

• வைட்டமின் E, மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளதால் சர்மத்தை  பல பல பாக வைக்க உதவும். மற்றும் முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடக் கூடியது நம் கடலை மிட்டாய்.

• கடலை மிட்டாயில் வெல்லம் சேர்த்திருப்பதால் சர்க்கரை நோயாளிகளைத் தவிர மற்ற அனைவரும் சாப்பிடக்கூடிய சிறந்த சிற்றுணவு கடலை மிட்டாய். 

     இத்தனை சத்துக்கள் நிறைந்த நம் ஊரு கடலை மிட்டாயை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். கலப்படம் நிறைந்த பல கவர்ச்சிகரமான மிட்டாயை வாங்கி சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கி கொள்ளாமல் கடலை மிட்டாயை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

Comments

Post a Comment