மனச்சோர்வு

  

     சந்தோஷம், துக்கம் என்பது அனைத்து வித மனிதர்களுக்கும் உள்ள பொதுவான உணர்வாகும். அத்தகைய உணர்வு அளவை மிரும்போது அது ஒரு நோயாக மாறும். சந்தோஷம் என்பது மனவெழுச்சி  நோயாகவும் துக்கம் என்பது மனச்சோர்வாகவும் மாறும்.

மனச்சோர்வு

     மனச்சோர்வு மனிதர்களை இரண்டு விதமாக தாக்குகிறது ஒன்று உடலில் ஏற்படும் மாற்றம் இரண்டாவது சுற்றுசூழளால் ஏற்படும் மாற்றம்.

1. உடலில் ஏற்படும் மாற்றம் : 

     நம் உடலில் இரத்த சக்கரை அளவு (Blood sugar level) குறையும் போது எப்படி எந்த ஒரு வேலையும் செய்ய முடியாதது போல் சோர்வு அடைகிறோமோ அதை போல நம் மூளையில் ஒரு சில இரசாயனங்கள் உள்ளது நாம் சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்க அந்த இரசாயனங்கள் தேவைப்படும் அதில் சில மாற்றங்கள் வரும்பொழுது மனிதர்களுக்கு மனச்சோர்வு நோய் வருகிறது.

2. சுற்றுச்சூழலால் ஏற்படக்கூடிய மனச்சோர்வு :

     வேலை பார்க்கும் இடம், நம் வீடு, பணம் இதில்  ஏற்படக்கூடிய பிரச்சினையாக இருக்கலாம் நம் வீட்டில் யாருக்காவது மனச்சோர்வு இருந்தால் நமக்கும் வரக்கூடும் மற்றும் மருத்துவ ரீதியான உடல் பிரச்சனை கிட்னி, ரத்த சோகை, கேன்சர், தைராய்ட், லிவர் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு மனச்சோர்வு வரக்கூடும்.

மனநோய் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது ?

1. எந்த ஒரு வேலையிலும் ஆர்வம் இல்லாமல் போவது நாம் விரும்பிப் செய்து கொண்டிருந்த வேளையில் கூட தற்போது ஆர்வம் இல்லாமல் இருப்பது.

2. மலேரியா, டெங்கு போன்ற நோய் இருக்கும் பொழுது எவ்வாறு உடல் வலுவிழந்து சத்து  இல்லாதது போல காணப்படுகிறதோ அதைப்போல மனச்சோர்வு இருப்பவர்கள் மனரீதியாக மட்டும் இல்லாமல் உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

3. அன்றாட வேலைகளை கூட சரியாக செய்ய முடியாமல் போவது.

4. சரியான தூக்கம் இல்லாமல் போவது.

5. பசி இல்லாமல் போவது.

6. மனச்சோர்வு அதிகரிக்கும்போது உடல் எடை குறையும்.

7. மனதளவில் பார்க்கும் போது

* நம்பிக்கை இன்மை

* குற்றவுணர்ச்சி

* எதிர்காலத்தைப் பற்றிய பயம்

* எதிர்காலத்தில் என்ன

   செய்யப்போகிறோம் ?

8. மிக முக்கியம் தற்கொலை உணர்ச்சி தன்னம்பிக்கை இல்லாமல் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வது.

     இதில் உள்ள அறிகுறிகள் ஒரு மனிதனுக்கு இரண்டு வாரத்திற்கு மேல் இருக்கும்பொழுது அது மருத்துவ ரீதியாக சரி செய்ய வேண்டிய மனச்சோர்வு ஆகும்.

மருத்துவ ரீதியான தீர்வுகள் :

     ஒன்று மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும், இரண்டாவது சுற்றுச்சூழல் ரீதியான பிரச்சனைக்கு அதை எப்படி சரி செய்வது போன்ற  ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டவரை எப்படி நடத்த வேண்டும் பார்த்துக் கொள்ள வேண்டும் என வீட்டில் இருப்பவர்கள்  ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

     இது இரண்டும் மருத்துவ ரீதியான தீர்வுகள் மனச்சோர்வை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் மனச்சோர்வு வராமல் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும் அதற்கு ஒரே தீர்வு எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டும்.



Comments

  1. Thanks a lot for the useful information

    ReplyDelete
  2. The tip of the pen is stronger than the tip of the sword.. god bless you

    ReplyDelete

Post a Comment