ஏமாந்தது போதும்
இன்று நாம் சாப்பிடுவது இன்றைய பசிக்காக மட்டும் இல்லை எதிர்காலத்தில் ஆரோகியமாக இருப்பதற்காகவும் தான்.
ஆனால் ஆரோக்கியத்தை பற்றி துளியும் சிந்திக்க விடாமல் அதிக சுவை, விலை குறைவு, எளிதாக சமைக்கலாம் என பல்வேறு விதமாக விளம்பரத்தின் மூலம் பல உணவுப் பொருள்கள் நம் அன்றாட வாழ்வில் வந்து விட்டது அதில் ஒன்றுதான் மேகி தற்பொழுது மேகி தயாரிக்கும் "நெஸ்லே" நிறுவனம் மேகி நூடுல்ஸ், ஐஸ்கிரீம் உட்பட 60 சதவீத உணவு பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என ஏற்றுக்கொண்டு உள்ளது.
சிந்தித்துப் பாருங்கள் அந்த மேகியை எவ்வளவு நாள் ஆசையாக சாப்பிட்டிருப்போம், சில நம்பர் வீட்டில் எப்பொழுதும் மேகியை இருப்பு வைத்திருப்பார்கள், சமைக்க நேரம் இல்லாமல் வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் மேகி ஒரு தினசரி உணவாகவே மாறிவிட்டது, மிக மிக முக்கியம் பல குழந்தைகள் இந்த மேகியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இதில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் லாபத்திற்காக நெஸ்லே போன்ற பல நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
மேகி ஆரோக்கியம் இல்லாதது என 2015ல் தடை செய்தார்கள் அதன் பிறகு ஆரோக்கியமான உணவாய் தருகிறோம் என ஆறு மாதம் பிறகு மீண்டும் வந்தது மேகி தற்பொழுது 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2021ல் மீண்டும் இது ஆரோக்கியம் இல்லை என அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டு ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என நெஸ்லே நிறுவனம் கூறியுள்ளது.
இதுபோன்ற பல நிறுவனம் தன் லாபத்திற்காக லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கி விட்டார்கள்.
"ருசிக்காக ஏங்கி ஏமாந்தது போதும்"...
மேகி போன்ற பல உணவுகள் நம் ஆரோக்கியத்திற்கு எதிராக உள்ளது.
நாம் அதை புரிந்துகொண்டு கலப்படம் இருக்கும் ஆரோக்கியமற்ற உணவிலிருந்து இயற்கையான ஆரோக்கியம் உடைய உணவிற்கு மாறும் பொழுதுதான் ஆரோக்கியமற்ற உணவுகள் அழியத் தொடங்கும். இப்பொழுது ஆரோக்கியமற்ற உணவு வகைகள் அழிய தொடங்கிவிட்டால் போதும் நம் குழந்தைகள் வளரும் பொழுது அவ்வித உணவுகள் முற்றிலும் அழிந்துவிடும்.
நாம் அனைவரும் இயற்கை தரும் ஆரோக்கியத்தை மட்டும் உணவாக எடுத்துக்கொண்டு நம்முடைய அடுத்த தலைமுறைக்கு இயற்கையான ஆரோக்கியம் உடைய ஒரு வாழ்க்கையை கொடுக்கவேண்டும்.
ஆனால் இது அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதன் கையில்தான் உள்ளது
முற்றிலும் உண்மை
ReplyDeleteGood information
ReplyDelete