ஆக்சிஜன் நிறைந்த உணவுகள்



கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துவது ஆக்சிஜன் அளவு குறைவதுதான் எனவே உடலில் ஆக்சிஜன் லெவலை அதிகரிக்கக்கூடிய உணவை நாம் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் நுரையீரலில் சுவாச பாதைகளை கொரோனா வைரஸ் தாக்குகிறது அதனால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் உருவாகி மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ரத்த சிவப்பணுக்களின் ஆக்சிஜன் குறையும்போது செயற்கை சுவாசம் தேவைபடுகிறது. சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் கொடுக்காவிட்டால் உயிரிழக்கும் அபாயம் உண்டு. எனவே நம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

ஆக்சிஜனை அதிகரிக்கும் உணவுகள்


1, ஆக்சிஜனை  கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ள மசாலா பொருள் கிராம்பு.

• மசாலா குழம்பு, தக்காளி சோறு, பிரியாணி உள்ளிட்டவற்றில் கிராம்பு சேர்க்கலாம்.
• தினமும் ஒரு கிராம்பு எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு அவசியம்.

2, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியோடு ஆக்சிஜன் அளவையும் அதிகரிப்பது மஞ்சள்.

• மஞ்சளை தேநீரில் சேர்க்கலாம். மஞ்சள், மிளகு சேர்த்து பால் குடிக்கலாம்.
• சமையல் அனைத்திலும் தவறாமல் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3, சமையலில் தேவைப்படும் இடங்களில் பட்டை சேர்ப்பது அவசியம்.

4, துளசி இலைகளை சாப்பிடுவதாலும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கலாம்.

• நாள்தோறும் பத்து துளசி இலைகளை பறித்து சுத்தமாக கழுவிய பின் சாப்பிட வேண்டும்.

5, கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சியில் ஆக்சிஜனை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ளது

• கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று சாப்பிடப் பழக வேண்டும்.

6, எலுமிச்சம் பழத்தை வெட்டி நீரில் போட்டு கொதிக்கவைத்து  வடிகட்டி குடிக்க வேண்டும்.

7, பட்டாணி, பீன்ஸ், சோயா, கொண்டக் கடலை, காராமணி போன்றவை ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

8, நமது உடலில் இரும்பு சத்து குறைபாடு இருந்தால் ஆக்சிஜன் குறையும் அபாயம் உள்ளது எனவே இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

9, பசலைக்கீரை, தர்பூசணி, முருங்கைக்கீரை, அன்னாசிப்பழம், அவித்த வேர்க்கடலை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியும்.

இவை அனைத்தையும் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு உடலில் இயற்கையாகவே ஆக்சிஜன் லெவலை  அதிகரித்துக் கொள்ள வேண்டும். 

Comments