கொரோனா மூன்றாம் அலை & தடுப்பூசி

 

     கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயாராகுங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் ஆபத்தான முறையில் பாதிக்க உள்ளது. கொரோனா மூன்றாம் அலையில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என ஆராய்ச்சிகள் கூறுகிறார்கள்.
 

     அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதல் கொரோனா அலைக்கு பிறகு நாம் இருந்த அலட்சியத்தின் விளைவுதான் இரண்டாம்  அலையில்  ஏற்பட்ட இழப்புக்கு காரணம். இரண்டாம் அலைக்கு பிறகும் நாம் விழிப்புணர்வு இல்லாமல், முக கவசம் அணியாமல், கூட்டத்தில் உரையாடிக் கொண்டு, சமூக இடைவெளியை மறந்து விட்டு, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் இந்த வருடம் இறுதியில் இதுவரை இல்லாத அளவில் இழப்பை நாம் காண உள்ளோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
 

     கொரோனா  மூன்றாம் அலையை  எதிர்கொள்ள மருத்துவத்துறையில் மிக விரைந்து செயல்பட்டு வருகிறார்கள். அனைத்து மருத்துவமனையிலும் 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் நடக்கிறது. மற்றும் மூன்றாம் அலை குழந்தைகளை பாதிப்பதால் அனைத்து மருத்துவர்களுக்கும் கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது மற்றும் பல முன்னேற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

 குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் :
 

     குழந்தைகளை மிக மிக பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் மழைகாலம் வர உள்ளது அந்த சமயத்தில்தான் மூன்றாம் அலையும் மிக அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு பொதுவாகவே மழை காலம் என்றால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை வரக்கூடும் அந்த சமயத்தில் மருத்துவமனையில் கொரோனா விற்காக  உள்ள கூட்டம் அதிக அளவில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் இப்போதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் கவனமாக இருங்கள் ருசிக்காக சாப்பிட்டது போதும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உடைய உணவை சேர்த்துக் கொள்ளுங்கள் குழந்தைகளின் ருசியும், ஆசையும் விட அவர்களின் ஆரோக்கியம் தான் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.



 தடுப்பூசியை பற்றி மருத்துவர்களின் ஆலோசனைகள் :
 


     கொரோனா என்ற போரை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் கடைசி ஆயுதம் தான்  தடுப்பூசி

 தடுப்பூசி செலுத்திய பின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்?
• ஊசி செலுத்திய கையில் வலி ஏற்படுதல்
• ஊசி செலுத்திய இடத்தில் வீக்கம் ஏற்படுதல்
• உடல் வலி ஏற்படுதல்
• காய்ச்சல் ஏற்படுதல்
• தலை வலி ஏற்படுதல்
• சோர்வு ஏற்படுதல்

 காய்ச்சல், வலி குறைய பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.

 தடுப்பூசி போடும் முன் போட்ட பின் என்ன அருந்தக்கூடாது ?

     தடுப்பூசி செலுத்திய பிறகு மூன்று நாட்களுக்கு மது அருந்த கூடாது. தடுப்பூசி செலுத்தும் முன்பும் மது அருந்தாமல் இருப்பது நல்லது.

 என்ன உணவு சாப்பிடலாம் ?

• சைவம், அசைவம் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    தடுப்பூசியில் உணவுக்கான கட்டுப்பாடுகள் பெரிய அளவில் கிடையாது. தடுப்பூசி இல்லாமல் வேறு காரணத்திற்காக உணவு முறையை கடைபிடிக்கும் மக்கள் உங்கள் மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்வது  நல்லது.

• தண்ணீர் தேவையான அளவு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது இல்லை.

 • பழங்கள், காய்கறிகள், மீன் மற்றும் பருப்பு வகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவு ?
     மைதாவில் தயாரான உணவை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மைதாவில் எந்தவித விட்டமின் சத்தும் கிடையாது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

 தடுப்பூசி செலுத்தி கொள்ளும்போது ?
• ஏதாவது உணவு உட்கொண்ட பின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் தடுப்பூசி எடுப்பது நல்லது இல்லை.

• தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் முன் ஓய்வு, தூக்கம் அவசியம் தேவை.


 நாம் கடைபிடிக்க வேண்டியவை :
 தரமான முக கவசம் அணிய வேண்டும்
     நாம் விடும் மூச்சு காற்று முகத்தை கடந்து வெளியே செல்லக்கூடாது அப்படி இருந்தால்தான் பிறரிடம் இருந்து வரக்கூடிய காற்று நம்மைத் தாக்காது இவ்வாறு இருப்பதே தரமான முக கவசம்.

• சானிடைசர் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுங்கள்.
• பொது நிகழ்ச்சி நடத்துவதையும், பங்கேற்பதையும் தவிர்க்க வேண்டும்.
• எப்போதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
• தடுப்பூசியை கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள்.

     முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது இது அனைத்தும் காவல்துறைக்கு பயந்தோ அல்லது ஊரடங்கின் போது மட்டுமே பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் அல்ல  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களின் உயிர் சம்பந்தப்பட்டவை அதனால் எந்த செயலையும் அலட்சியப்படுத்தாமல் சுய உணர்வோடு இருந்து நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்து கொரோனா என்ற கொடூரத்தை இந்த உலகத்தை விட்டு விரட்டி அடிப்போம்.

Comments