நெல்லிக்காய்

 

"நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் ஒரு நெல்லிக்காய்"

     நெல்லிக்காயில் இரண்டு விதம் உள்ளது காட்டு நெல்லிக்காய் என்று அழைக்கப்படும் நெல்லிக்காயில் தான் ஆரோக்கியம் அதிகளவில் உள்ளது. இந்த நெல்லிக்காயில் விட்டமின் சி (Vitamin C ) நிறைந்துள்ளது. விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை தினமும் ஒரு நெல்லிக்காய் எடுத்துக்கொள்வதன் மூலம்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பலவித நோய்கள் வராமல் காத்துக்கொள்ள முடியும் குறிப்பாக குழந்தைகளுக்கு மற்றவர்களிடமிருந்து பரவக்கூடிய நோய்கள் பரவாமல் இருக்க எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்பு சக்தி இந்த நெல்லிக்காயில் உண்டு.
 

நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளும் விதம் :
1, நெல்லிக்காய் மரத்தில் இருந்து பறித்த படி சாப்பிட வேண்டும்.
2, குழந்தைகளுக்கு சாப்பிட கடினமாக இருக்கும் சமயத்தில் நெல்லிக்காயுடன் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
3, நெல்லிக்காயில்  ஊறுகாய் போட்டுச் பயன்படுத்துவதைத் குறைத்துக்கொண்டு இயற்கையாக சாப்பிடக் பழகிக் கொள்ள வேண்டும்  ஏனென்றால் நெல்லிக்காயில் இருக்கும் சத்துகள் 10 சதவீதம் மட்டுமே ஊர்களிலிருந்து கிடைக்கும்.
4, நெல்லிக்காயை சாறாக மாற்றி குடிக்கலாம்.

நெல்லிக்காயின் தற்போதைய நிலைமைை :
 நம் ஊரில் ஆப்பிளுக்கு உள்ள மரியாதை நெல்லிக்காய்க்கு கிடையாது.
 மற்ற காய்களுக்கு உள்ள விற்பனை நெல்லிக்காய்க்கு கிடையாது.
 இதற்குக் காரணம் நம்மில் பலருக்கும் நெல்லிக்காயில் உள்ள பலன் தெரியாது.
 

     குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளக்கூடிய நெல்லிக்காயை நாம் தினமும் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும்.
 

"இயற்கையோடு சேர்ந்து இருப்போம்

நோய்களிலிருந்து விலகி இருப்போம்"

Comments