மைதா
நார்ச்சத்து, வைட்டமின், புரோட்டின் எதுவும் இல்லாமல் ரசாயனங்கள் நிறைந்த ஆபத்தான பொருள் தான் மைதா.
கோதுமையில் டியுரம் எனப்படும் மென்மையான கோதுமை வகையை தேர்ந்தெடுத்து அதனுடைய மேல் தோல் உள் தோல் இரண்டையும் நீக்கி அதன் உள் உள்ள எண்டோஸ்பெர்ம்(Endosperm) என அழைக்கப்படும் ஸ்டார்ச் பகுதியை மட்டும் தனியாக பிரித்து எடுத்து நன்கு அரைத்து மைதா உருவாக்கப்படுகிறது மற்றும் மரவள்ளிக்கிழங்கை அரைத்து மைதா தயாரிக்கப்படுகிறது.
மைதாவின் வரலாறு :
இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியர்கள் கோதுமையை தான் ரொட்டி சுடுவதற்கும், சப்பாத்தி சுடுவதற்கும் பயன்படுத்தி வந்தனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு கோதுமை பற்றாக்குறை காரணமாக மைதா கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மைதாவை குதிரைக்கும், கழுதைக்கும் உணவாகவும் மற்றும் போஸ்டர் ஒட்டவும் பயன்படுத்தப்பட்டது.
மைதா முதலில் பர்மாவில் உள்ள அடிமைகளுக்கு தான் உணவாய் அளிக்கப்பட்டது ஏனென்றால் குறைந்த அளவில் கொடுத்தாலே பசி அடங்கிவிடும் அதிக வேலை வாங்க முடியும் என்பதற்காக அளிக்கப்பட்டது. மைதாவின் சுவை காரணமாக பர்மாவிலிருந்து வந்த மக்களால் இந்தியாவிற்கு பரவியதாக வரலாறு கூறுகிறது.
மைதாவில் உள்ள ஆபத்தான ரசாயனங்கள் :
1, பெஸ்யோயல் பேரோக்ஸிடே (Benzoyl Peroxide)
2, அல்லோக்ஸாம் (Alloxan)
3, மீதியல் ப்ரோமிடே (Methyl bromide)
4, அஜினோமோட்டோ (Ajinomoto)
பெஸ்யோயல் பேரோக்ஸிடே (Benzoyl Peroxide) :
மைதாவை வெள்ளையாக மாற்றுவதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு ரசாயனம்
இந்த ரசாயனத்தை தலைமுடிக்கு பயன்படுத்தக்கூடிய டை, முகத்திற்கு பயன்படுத்தக்கூடிய க்ரீம், வெள்ளை சட்டை சாயத்திற்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு வேதிப்பொருள் தான் இந்த பெஸ்யோயல் பேரோக்ஸிடே.
அல்லோக்ஸாம் (Alloxan) :
மைதா மென்மையாக இருக்க பயன்படுத்தக்கூடிய ஒரு ரசாயனம்.
இந்த ரசாயனம் மருந்துகள் சோதனை செய்யும் சோதனை சாவடிகளில் எலிகளுக்கு சக்கரை நோய் வர செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு ரசாயன பொருள் தான் இந்த அல்லோக்ஸாம்.
மீதியல் ப்ரோமிடே (Methyl bromide) :
தயார் செய்த மைதாவில் பூச்சிகள் உருவாகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஒரு கொடூரமான ரசாயனம் தான் இந்த மீதியல் ப்ரோமிடே.
அஜினோமோட்டோ (Ajinomoto) :
சுவையை அதிகப்படுத்தப் பயன்படுத்தக்கூடிய ஒரு ரசாயனம்.
இந்த அஜினோமோட்டோ மூளையில் ஹைப்போதாலமுஸ் (Hypothalamus) என்னும் பகுதியை பாதிக்கிறது மற்றும் உடல் வளர்ச்சியை தடுக்கிறது, உடல் எடை அதிகரிக்கிறது, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் இரைப்பையில் புண் ஏற்படுதல், ஒற்றை தலைவலி, இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்ற நோய்கள் இந்த அஜினோமோட்டோ பயன்படுத்துவதால் வருகிறது என கண்டுபிடித்துள்ளனர்.
மரவள்ளிக்கிழங்கில் உருவாக்கப்படும் மைதா :
இவ்வித மைதா நம் கணையத்தில் உள்ள பீட்டா என்னும் செல்லை அழிக்கிறது. பீட்டா செல் நம் உடம்பில் இன்சுலின் சுரக்க காரணமாக உள்ளது அந்த செல் அழியும்போது எளிதில் சக்கரை நோய் வரக்கூடும்.
மரவள்ளிக்கிழங்கு மூலமாக உருவாக்கப்படும் மைதாவை நாம் சாப்பிடும்போது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
மைதா பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகள் விரைவில் நம்மை மருத்துவமனைக்கு செல்ல வைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
மைதா பயன்படுத்தி உருவாக்கப்படும் தின்பண்டங்கள் முக்கியமாக பரோட்டா போன்ற உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும்.
ஆபத்துக்கள் நிறைந்த இந்த மைதாவை UK, Chinna உள்ளிட்ட நாடுகளில் தடை செய்து விட்டார்கள்.
மைதாவை நம் நாட்டில் தடை செய்துவிட்டால் அனைவருக்கும் நல்லது ஆனால் அது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்.
மைதாவில் உள்ள ரசாயனங்களை நினைவில் கொண்டு நம் வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மைதாவை நம் வீட்டில் தடைசெய்து நம்மை நாமே காப்போம்.
உணவே மருந்து...Thank you very much bala...
ReplyDelete