பழைய சாதம்
நாம் முகம் சுழித்து தள்ளி வந்த நம் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றுதான் பழைய சாதம்
பழைய சாதத்தின் பெருமை பிற நாட்டிற்கு தெரிந்த அளவிற்கு கூட நம் நாட்டிற்கு தெரியவில்லை
அமெரிக்காவில் நம் உணவாகிய பழைய சாதத்தை ஆராய்சி செய்து காலை உணவிற்கு சரியான உணவாக உள்ளது மற்றும், பழைய சாதத்தை சாப்பிடுவதால் நம் உடம்பில் பலவித நல்ல மாற்றங்கள் ஏற்படும் என கூறியுள்ளது
பழைய சாதம்
முதல்நாள் சமைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி மோர், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து மறுநாள் காலையில் சாப்பிடுவது தான் இந்த பழைய சாதம்
பழைய சாதத்தின் நன்மைகள் :
1, விட்டமின் B6, B12 அதிகம் உள்ள உணவு
2, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
3, லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியா உள்ளதால் செரிமானப் பிரச்சனை நீங்கும் மற்றும் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்
4, தினமும் காலையில் பழைய சாதத்தை சாப்பிடுவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெறும்
5, உடல் சூட்டால் முடி கொட்டுதல், அல்சர் போன்ற பிரச்சினைகள் வரக்கூடும் உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் தினமும் பழைய சாதத்தை சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும்
6, பழைய சாதத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது
7, உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும்
8, பழைய சாதம் ரத்த அழுத்தத்தை குறைக்கும்
9, பழைய சாதத்தை மண்பானையில் ஊறவைத்து சாப்பிடுவது இன்னும் நன்மை தரும்
10, கோடைக்காலத்திற்கு சிறந்த உணவு நம் பழைய சாதம் தான்
இயற்கையான ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லாத ஒரு வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்
நாம் ஆரோக்கியமான உணவை ஒதுக்கிவைத்துவிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துக்கொண்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகிறோம்
நாம் ஒதுக்கி வைத்த ஒரே ஒரு உணவில் இவ்வளவு பலன் இருக்கும் போது ஒவ்வொரு உணவிலும் எவ்வளவு நன்மை இருக்கும் என நினைத்து பாருங்கள்
மருத்துவமனைக்கு செல்லாது ஒரு வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் நம் உணவு பழக்கத்தை மாற்றி இயற்கை தரும் ஆரோக்கியமான உணவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்
அவ்வித ஆரோக்கியமான உணவை நம் பழைய சாதத்தில் இருந்து தொடங்கலாம்...
Wow
ReplyDeleteஉணவே மருந்து... தொடரட்டும் உங்களின் எழுத்து பயணம்
ReplyDeleteவாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடுவோம்
ReplyDelete