தூக்கம்
எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் யாருக்கும் தூக்கத்தின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது தூக்கம் என்பது மனிதர்கள் செய்யும் சாதாரண வேலை அல்ல தூக்கத்தின் நேரமும் தூக்கத்தின் முறையும் வைத்துதான் மனிதர்களின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது மருத்துவத்தில் தூக்கத்திற்கான தனிப்பிரிவு உள்ளது நம்மில் எத்தனை நபருக்கு தெரியும்
ஏன் தூங்க வேண்டும் தூக்கம் எதற்காக?
மனிதர்கள் காலை முதல் இரவு வரை பல வேலைகளை செய்து வருகின்றனர் அத்தனை வேலைகளையும் செய்ய உடம்பில் வலுவும் ஆரோக்கியமும் தேவை அத்தகைய வலுவும் ஆரோக்கியமும் நமக்குக் கிடைக்கச் செய்வதில் பெரும்பங்கு தூக்கத்திற்கு உண்டு
தூங்கும் போது நம் உடம்பு மட்டும் ஓய்வு எடுக்கவில்லை நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீரான சம நிலையை அடைகிறது அத்தகைய நேரத்தில் தான் நம்முடைய வளர்ச்சி உண்டாகும் இரத்த அழுத்தத்தின் அளவு சர்க்கரை அளவு அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்
தனி மனித உடம்பின் வேறுபாடுகள் படி ஒரு நாளைக்கு 6 - 9 மணி நேரம் தூக்கம் அவசியம் அத்துடன் இந்த நேரத்திற்குள் தூங்கிவிடுவேன் இந்த நேரத்திற்குள் எழுந்து விடுவேன் என நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்
சரியான தூக்கம் இல்லை என்றால் என்ன ஆகும்?
ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் கண் எரிச்சல், தலைவலி, வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவது, என பல மாற்றங்கள் உண்டாகும் அந்த தூக்கம் இல்லாமல் இருப்பது தொடரும் பொழுது மருத்துவரீதியான பிரச்சனை, அளவியல் பிரச்சனை, கோபம், எரிச்சல், மன அழுத்தம் மனச்சோர்வு, சர்க்கரை, இரத்த அழுத்தம், பக்கவாதம் என பல பிரச்சனைகள் வரக்கூடும்
உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக உள்ளது தூக்கம் அதில் மனிதர்கள் மட்டும் தான் தூக்கத்தின் மதிப்பு புரியாமல் அதை குறைத்துக் கொண்டு தூக்கத்தின் நேரத்தை மற்ற வேலையில் செலவு செய்து கொண்டு இருக்கிறோம்
சிந்தித்துப் பாருங்கள்
மருத்துவத்துறையில் இதயம், நரம்பு என பல பிரிவில் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என நமக்குத் தெரியும் அதைப்போல தூக்கத்திற்காக இருப்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இதில் இருந்தாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்று
தூக்கம் ஓய்விற்காக மற்றும் இல்லை மாற்றத்திற்காகவும் தான்
Pudu try panringa sir, vazthukal
ReplyDeleteஉண்மை 👍
ReplyDeleteSuper
ReplyDeleteArumaiyana pathivu nanba
ReplyDeleteஅருமை
ReplyDeleteஉண்மைதான்
ReplyDeleteTrue dear
ReplyDeleteவாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் பேனாவின் பயணம் 🖋️📝
ReplyDeleteநான் கரைக்டாதூங்கி
ReplyDeleteநான் கரைக்டாதூங்கி எழுவேன்நோ.
Deleteப்ராப்ளம்